search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தானே நீதிமன்றம்"

    ஆட்கடத்தல் வழக்கில் வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு தானே மாவட்ட நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. #HumanTrafficking #BangladeshisJailed #ThaneFleshTrade
    தானே:

    மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவலின்படி ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி மாறுவேடத்தில் ஆட்களை அனுப்பி விசாரித்தனர். அப்போது, அங்கு பாலியல் தொழில் நடந்தது தெரியவந்தது. பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 5 பெண்களை மீட்டனர்.

    சட்டவிரோதமாக பெண்களைக் கடத்தி வந்து பாலியல் தொழில் செய்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த கபார் ஷபியுதீன் ஷாயிக்(48), அவரது மனைவி ஷிவாலி (36), ஷிவாலியின் சகோதரி நர்கிஸ் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த தம்பதியரின் 11 வயது மகனை சிறார் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டவிரோத ஆட்கடத்தல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தானே மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

    இவ்வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதி காலிப் தீர்ப்பு வழங்கினார். அப்போது, கணவன் மனைவி உள்ளிட்ட மூன்று பேர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குவதாக நீதிபதி அறிவித்தார். மேலும் மூவருக்கும் தலா 26 ஆயிரம் ரூபாய அபராதமும் விதித்தார். #HumanTrafficking #BangladeshisJailed #ThaneFleshTrade

    அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தானே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. #rahulgandhi #defamationcase
    தானே:

    மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான் கொன்று விட்டது என கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசினார். இதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், அந்த அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குந்தே என்பவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    கடந்த முறை ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். விசாரணை தொடங்கியதும், ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்தபோது, அவற்றை ராகுல் காந்தி மறுத்தார். தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் அவர் கூறினார். இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #RSS #rahulgandhi #defamationcase
    ×